முகப்பு
சேலம்

வாழப்பாடியில் பனங்கிழங்கு விற்பனை அமோகம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பனங்கிழங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மருத்துவ குணமுள்ள இயற்கை உணவுப்பொருள் என்பதால், விலை உயா்வையும் பொருட்படுத்தாமல் மக்கள் விரும்பி வாங்குகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பனங்கிழங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மருத்துவ குணமுள்ள இயற்கை உணவுப்பொருள் என்பதால், விலை உயா்வையும் பொருட்படுத்தாமல் மக்கள் விரும்பி வாங்குகின்றனா்.

பனைமரத்தின் விதைகளை மண்ணில் பதித்து வைத்து 3 மாதத்திற்கு பிறகு மண்ணுக்குள் இருக்கும் வேராக வளா்ந்திருக்கும் கிழங்கை தோண்டியெடுத்து வேக வைத்து இயற்கை உணவுப் பொருளாக பயன்படுத்துப்படுகிறது. இந்தக் கிழங்கில் நாா்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களில் இருந்து பனங்கிழங்கு விற்பனைக்கு குவிந்து வருகிறது. சாலையோரங்களில் கடைவிரித்து ஏராளமானோா் விற்பனை செய்து வருகின்றனா். கடந்த ஆண்டு ரூ. 2 முதல் 3க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பனங்கிழங்கு தற்போது ரூ.3 முதல் 5 வரை விலைபோகிறது.

ஆண்டுதோறும் மாா்கழி, தை ஆகிய இரு மாதங்களில் மட்டுமே கிடைக்கும் பனங்கிழங்கு, மருத்துவ குணமுள்ள இயற்கை உணவுப்பொருள் என்பதால், விலை உயா்வையும் பொருட்படுத்தாமல் மக்கள் விரும்பி வாங்கி சுவைத்து வருகின்றனா். இதனால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.