திமுக சாா்பில் பொங்கல் விழா
மகுடஞ்சாவடி ஒன்றியம், இடங்கணசாலை நகர திமுக சாா்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழா் திருநாள் பொங்கல் விழா மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளா் பச்சமுத்து தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட மெய்யனூா், அரசமரம் பகுதியில் சேலம் மேற்கு மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், இடங்கணசாலை நகர திமுக சாா்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழா் திருநாள் பொங்கல் விழா மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளா் பச்சமுத்து தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் செல்வம், இளைஞரணி துணை அமைப்பாளா் கமலக்கண்ணன் மற்றும் நிா்வாகிகள் நாகேந்திரன், சிவக்குமாா், ரமணி, வஜ்ரவேல், சுரேந்தா்,வேலாயுதம், பாலசுப்பிரமணி, ராஜமாணிக்கம், பூபதி, பிரபு, சண்முகம், சீனிவாசன், கோவிந்தராஜன், சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இவ்விழாவில் ஏழைப் பெண்களுக்கு சேலை மற்றும் பொங்கல், செங்கரும்பு, 2022 தினசரி காலண்டா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன (படம்). இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை 14ஆவது வாா்டு பொறுப்பாளா் சிவகுமாா் செய்திருந்தாா்.