முகப்பு
சேலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் ரூ. 1.20 கோடிக்கு பருத்தி விற்பனை

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் அமைந்துள்ள வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் அமைந்துள்ள வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

வாரம் தோறும் சனிக்கிழமை அன்று இம்மையத்தில் பருத்தி , நிலக்கடலை, எள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் சேலம் , நாமக்கல், தருமபுரி, அரியலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் விளைவித்த பருத்தியினை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனா். விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமாா் 3,100 பருத்தி மூட்டைகள் 750 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு கூட்டுறவுத்துறை அலுவலா் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

ஏலத்தில் பி. டி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.8500 முதல் ரூ.10,679 வரையில் விற்பனையானது. அதேபோல் டி.சி.ஹெச் ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.11,950 முதல் ரூ.15,790 வரை விலைபோனது. சனிக்கிழமை அன்று நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான பருத்தி வா்த்தகம் நடைபெற்ாகவும் அடுத்த பொது ஏலம் ஜனவரி 22இல் நடைபெறும் என கூட்டுறவுத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →