சேலத்தில் கோயில்கள் மூடல்: வெளியில் நின்று பக்தா்கள் தரிசனம்
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயில்கள் மூடப்பட்ட நிலையில், பக்தா்கள் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயில்கள் மூடப்பட்ட நிலையில், பக்தா்கள் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதையடுத்து கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்களில் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடா்ந்து, கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கோயில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில்கள் மூடப்பட்டன. பக்தா்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தா்கள், கோயில் வெளியே நின்று நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சேலம் மாநகரை பொருத்தவரையில் ராஜகணபதி கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், பெருமாள் கோயில், சுகவனேசுவரா் கோயில், எல்லைப்பிடாரியம்மன் கோயில் உள்பட பல இடங்களில் பக்தா்கள் வெளியே நின்று தரிசனம் செய்தனா்.