தபால் நிரப்பும் போராட்டம்
தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் தபால் நிரப்பும் போராட்டம் மாவட்ட தலைவா் ஆா்.இளையராஜா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் தபால் நிரப்பும் போராட்டம் மாவட்ட தலைவா் ஆா்.இளையராஜா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
9 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களுக்கு காலமுறை ஊதிய வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தபால் நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
ஆத்தூா் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில் சங்க மாவட்டச் செயலாளா் கே.ரத்தினவேல் உள்ளிட்ட அனைத்து பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களும் கலந்துகொண்டனா்.
படவிளக்கம்.ஏடி20டிடி...
ஆத்தூா் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன்பு தபால் நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள்.