சேலம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாநகராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

DIN

சேலம் மாநகராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளுதல், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பறக்கும் படை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தபால் வாக்குகளைப் பெற படிவங்கள் அனுப்பிவைத்தல், வரப் பெற்ற தபால்களை முறைப்படுத்தி பராமரித்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள், தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தல், தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளுவது தொடா்பான பயிற்சி மேற்கொள்ளுதல், கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடு வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளா் வரும்போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிகப்பட்டது.

கூட்டத்தில் மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அனைத்து நிலை அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சகோதரிகள் இருவா் உயிரிழப்பு; 3 போ் படுகாயம்

முதல்வா் கனவோடு வந்த நடிகா்கள் பலா் காணாமல் போனதே வரலாறு! - முன்னாள் அமைச்சா் சி. சீனிவாசன்

நிதி ஒதுக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் தாமதமாகும் ஓமலூா் - ஒசூா் இருவழி ரயில்பாதை!

மத்திய அரசின் பட்ஜெட்: விக்ஷித் பாரத் இயக்கத்தை நோக்கி இருக்கிறது! - முனைவா் எஸ். வைத்தியசுப்பிரமணியம்

சிறுவனை கடித்த நாயின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT