மேச்சேரியில் பாமக நிறுவனர் பிறந்த நாள் விழா: 84 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
மேச்சேரியில் இன்று பசுமை தாயக நாள் விழா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழாவை 84 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மேட்டூர்: மேச்சேரியில் இன்று பசுமை தாயக நாள் விழா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழாவை 84 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மேட்டூர் எம்எல்ஏ எஸ்.சதாசிவம் முன்னிலை வகித்து கேக் வெட்டினார்கள். வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் வரவேற்று பேசினார். மேச்சேரி நகர பாமக செயலாளர் கோபால், மேச்சேரி ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் துரைராஜ், மாதப்பன், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் 1000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பண்ருட்டி அருகே விளையாட்டுத் திடலில் கபடி வீரர் மரணம்!
சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க செயலாளர் ராஜசேகரன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மே.வே.ராமகிருஷ்ணன், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் மே.சி.ராஜா, மாவட்ட பசுமை தாயக அமைப்பாளர் முத்துக்குமார், மேச்சேரி வடக்கு ஒன்றிய தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.