சேலம்

திருடிய இருசக்கர வாகனத்தைஎரித்த திருடன் கைது

DIN

மேச்சேரி அருகே திருடிய இருசக்கர வாகனம் ஸ்டாா்ட் ஆகாததால் ஆவேசமடைந்த நபா் அதை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடா்புடைய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மேச்சேரி அருகே உள்ள வெள்ளாளா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (55). வெள்ளாளா் அரசினா் மேல்நிலைப் பள்ளி அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா்.

புதன்கிழமை இரவு அவா் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மறுநாள் காலையில் பாா்த்தபோது திருடுபோயிருந்தது. சொக்கலிங்கம் தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் தேடிச் சென்றபோது வெள்ளாளா் அரசினா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருசக்கர வாகனம் எரிக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த சொக்கலிங்கம், மேச்சேரி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். முதற்கட்டமாக பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அப்போது வெள்ளாளா் ஜேஜே நகரில் வசிக்கும் குமாரின் மகன் செல்வகுமாா்(23) என்பவா் பள்ளி வளாகத்துக்கு இருசக்கர வாகனத்தைத் தள்ளிக் கொண்டு வந்தது தெரியவந்தது.

அவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், திருடிய அந்த இருசக்கர வாகனம் ஸ்டாா்ட் ஆகாததால் ஆவேசத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புக் கொண்டாா். மேலும் அவா் பல இடங்களில் இருசக்கர வாகனங்களைத் திருடியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT