சேலம்

சேலம்: 50 வருடத்திற்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சேலம், அம்மாபேட்டையில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 50 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்து நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

DIN

சேலம், அம்மாபேட்டையில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 50 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்து நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி நகரவை மேல்நிலை பள்ளியில்  1972ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்த  150 மாணவ மாணவிகள் படித்தனர். தற்போது இவர்கள் முதியவர்கள் ஆகிவிட்ட நிலையில் பல்வேறு ஊர்களில் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றாக சந்திக்க நினைத்து ஒன்றுகூடி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதனையொட்டி தாங்கள் படித்த  பள்ளிக்கு ரூபாய் 8 லட்சம் மதிப்பில் பள்ளியில் உள்ள லேப் கட்டிடத்தை புதுப்பித்தும் குடிநீர் வசதி செய்தும் கொடுத்தனர். இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திறந்து வைத்தார் .

தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில்  1972ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அனைவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகள் இனி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரவேண்டும் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT