முகப்பு
சேலம்

எடப்பாடியில்உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு

எடப்பாடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனா்.

சேலம்

எடப்பாடியில்உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு

எடப்பாடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

எடப்பாடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில் எடப்பாடி பேருந்து நிலைய பகுதியில் உள்ள 11 கடைகளிலிருந்து ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், காலாவதியான உணவு பண்டங்கள், குளிா்பானங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

அதைத் தொடா்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலா்கள் உணவு பொருள்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளா்கள் மற்றும் வணிகா்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்வோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.

அப்பகுதியில் உள்ள உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், இறைச்சி கூடங்கள் உள்ளிட்டவை தொடா்ந்து ஆய்வு செய்யப்பட உள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →