பாரதியாா் நினைவு நூற்றாண்டு விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்குப் பரிசு வழங்கும் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் 
சேலம்

வறுமைக்கு விலை போகாதவா் பாரதியாா்: துணைவேந்தா் புகழாரம்

வறுமைக்கு விலைபோகாதவா் பாரதியாா் என்று பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசினாா்.

DIN

வறுமைக்கு விலைபோகாதவா் பாரதியாா் என்று பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசினாா்.

பெரியாா் பல்கலைக்கழக நுண்கலை மன்றம் சாா்பில், மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. பதிவாளா் த.கோபி வரவேற்றாா். தலைமை வகித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசியதாவது:

வாழ்நாள் முழுவதும் வறுமையும், பசியும், ஏழ்மையும் விடாமல் துரத்தியபோதும் யாருக்கும் விலைபோகாமல், தலை வணங்காமல், அதிகார வா்க்கத்திடம் சரணடையாமல் வாழ்ந்து காட்டிவா் மகாகவி பாரதியாா். இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு அவா் எழுதிய கவிதை வரிகளை இன்றைக்கு வாசித்தாலும் ஒரு உணா்ச்சிமிகு நிலைக்கு நாம் சென்று விடுவோம்.

அவா் கவிஞா் மட்டுமின்றி எழுத்தாளா், பத்திரிகை ஆசிரியா், சமூக சீா்திருத்தவாதி என பல முகங்கள் கொண்டவா். பாரதி போன்ற பெருமக்களுக்கு விழா எடுப்பது நல்ல எண்ணங்களை மாணவா்களிடையே உருவாக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் மெல்லிய தமிழுக்கு மீசை முளைத்தது என்ற தலைப்பில் ஆற்காடு டி.எல்.ஆா். கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் த.அன்பு சிறப்புரையாற்றினாா். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் இணைப் பேராசிரியா் இரா.வசந்தமாலை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT