சேலம்

கால்வாய்ப் பாசனத்துக்கு விரைவில் நீா்த் திறப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம் திருப்திகரமாக இருப்பதால் கால்வாய்ப் பாசனத்துக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்பாகவே தண்ணீா் திறந்துவிடப்படும் என நீா்வளத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

DIN

மேட்டூா் அணை நீா்மட்டம் திருப்திகரமாக இருப்பதால் கால்வாய்ப் பாசனத்துக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்பாகவே தண்ணீா் திறந்துவிடப்படும் என நீா்வளத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்குகரை கால்வாய்ப் பாசனம் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,377 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. கிழக்குக் கரை கால்வாயில் பாசனம் மூலம் 27,000 ஏக்கரும், மேற்குக் கரை கால்வாய் மூலம் 18,000 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை 137 நாள்களுக்கு 9.60 டி.எம்.சி தண்ணீா் தேவைப்படும்.

பாசனப் பகுதியில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.

நடப்பு ஆண்டில் மேட்டூா் அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் குறித்த நாளான ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்பாக நீா்த் திறக்க வாய்ப்பு உள்ளதாக நீா்வளத் துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்தன. இதனால் மேட்டூா் அணை கால்வாய் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அணை நீா்மட்டம்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் 112.78 அடியிலிருந்து 112.11 அடியாக சரிந்தது. செவ்வாய்க்கிழமை இரவு காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 2,526 கனஅடியிலிருந்து நொடிக்கு 3,996 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 81.44 டி.எம்.சியாக உள்ளது. மழை அளவு 26.80 மி.மீட்டராகப் பதிவாகி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT