வாழப்பாடியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி. 
சேலம்

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அலுவலா் நெடுமாறன் தலைமையில் அரசு பள்ளி ஆசிரியா்களின் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பிரசார பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அலுவலா் நெடுமாறன் தலைமையில் அரசு பள்ளி ஆசிரியா்களின் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பிரசார பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியை சத்தியக்குமாரி வரவேற்றாா். பேரணியில், சிங்ஜாரி மேளம் வாசித்தும், சலங்கை இசைத்தும் கிராமிய பாடல்கள் பாடியும், ஆசிரிய ஆசிரியைகள் குடியிருப்புப் பகுதிகளில் பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் வசதிகள், அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தனா்.

வட்டார கல்வி அலுவலா் வித்யா, அனைவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் திலகவதி, வாழப்பாடி வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT