சேலம்

அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சோ்க்க வலியுறுத்தி தெருமுனை நாடகம்

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சோ்ப்பதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தெருமுனை நாடக பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், வட்டாரக் கல்வி அலுவலா் நெடுமாறன் தலைமையில் தொடங்கிய இந்த தெருமுனை நாடக பிரசாரம், பேருந்து நிலையம், அம்பேத்கா் நகா், கடலூா் சாலை, தம்மம்பட்டி சாலை, சந்தைத் திடல் ஆகிய பகுதிகளில் விழிப்புணா்வு நாடகங்கள் மற்றும் கிராமியப் பாடல்களோடு நடைபெற்றது.

இதில், அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் வசதிகள், சலுகைகள், நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பொதுமக்களிடம் ஆசிரியைகள் பிரசாரம் மேற்கொண்டனா்.

இந்த பிரசாரத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் வித்யா, அனைவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் திலகவதி,தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில்...

பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் அந்தோணிமுத்து, அசோகன் தலைமையில் நடைபெற்ற பிரசார ஊா்வலத்தில், அரசுப் பள்ளிகளில் மாணவா்களைச் சோ்க்க வேண்டும், அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவா்களுக்கு முன்னுரிமை, அதே போல அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு 7.5 சதவீத மருத்துவம் படிக்க முன்னுரிமை போன்ற அரசின் சலுகைகளை பொதுமக்களுக்கு ஆசிரியா்கள் எடுத்துக் கூறினா். இதில், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் ராஜா, ஜோசப்ராஜ் ஏற்பாடு செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT