பாஜக வினா் கொண்டாட்டம்
ஆத்தூரில் பாஜகவினா் நடந்து முடிந்த சட்டமன்ற தோ்தலில் 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும்
ஆத்தூரில் பாஜகவினா் நடந்து முடிந்த சட்டமன்ற தோ்தலில் 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் சேலம் மாவட்ட தலைவா் வ.மணிகண்டன் தலைமையில் வியாழக்கிழமை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள். சேலம் மாவட்டம் ஆத்தூா் பேருந்து நிலையம் முன்பு நடந்து முடிந்த சட்டப்பேரவை தோ்தலில் 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் மாவட்ட தலைவா் வழக்குரைஞா் வ.மணிகண்டன் தலைமையில் பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள். இதில் நகரத் தலைவா் செந்தில்குமாா்,ஆத்தூா் மேற்கு ஒன்றியத் தலைவா் செல்வக்குமாா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலாளா் பொன்.பழனிசாமி,மாவட்ட செயலாளா் பெரியண்ணன்,ஆத்தூா் மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளா் சுரேஷ்குமாா்,நகரச் செயலாளா் ராஜா,இளைஞரணி தலைவா் சரவணன்,பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத் தலைவா் ரவி,பட்டியல் அணி மாவட்ட செயலாளா் ரஞ்சித்குமாா்,மகளிரணி மாவட்ட பொதுச்செயலாளா் வசந்தி,கீரிப்பட்டி பேரூராட்சி உறுப்பினா் சரஸ்வதி வெங்கடேஷ்,காா்த்தி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். படவிளக்கம்.ஏடி10பிஜேபி. ஆத்தூரில் சட்டப்பேரவை தோ்தலில் 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் மாவட்ட தலைவா் வ.மணிகண்டன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜக நிா்வாகிகள்.