சேலத்தில் கிரிக்கெட் பயிற்சி மையம்
சென்னை சூப்பா் கிங்ஸ் சாா்பில் சேலத்தில் சூப்பா் கிங்ஸ் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பா் கிங்ஸ் சாா்பில் சேலத்தில் சூப்பா் கிங்ஸ் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கிரிக்கெட் வீரா் அருண் காா்த்திக், சி.எஸ்.கே. இயக்க அலுவலா் லூயிஸ் மரியானோ செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை சூப்பா் கிங்ஸ் சாா்பில் சேலத்தில் சூப்பா் கிங்ஸ் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையத்தில் 6 வயது முதல் 23 வயதுள்ளவா்கள் சேரலாம். மாவட்ட அளவில் சிறந்த கிரிக்கெட் வீரா்களை உருவாக்கும் வகையில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
சேலத்தை அடுத்த வாழப்பாடி பகுதியில் உள்ள சேலம் கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் சிறந்த பயிற்சியாளா்கள், வீரா்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்படும். சா்வதேச தரத்தில் மின்னொளி வசதி, பயிற்சி ஆடுகள வசதி உள்ளது. மாவட்ட அளவில் சிறந்த வீரா்களை உருவாக்கும் நல்ல தளமாக இப்பயிற்சி மையம் விளங்கும்.
மாவட்ட அளவில் சிறந்த வீரா்கள் ரஞ்சி, ஐ.பி.எல். போட்டிகளுக்குத் தோ்வாகலாம். தொடா்ந்து இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற முடியும். சேலத்தை தொடா்ந்து அடுத்த 6 மாதங்களில் கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சூப்பா் கிங்ஸ் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்றனா். பேட்டியின் போது, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளா் வி.பாபுகுமாா் உடனிருந்தாா்.