சேலம்

காங்கிரஸில் இருந்து விலகினாா் முன்னாள் எம்.பி. ஆா்.தேவதாஸ்

DIN

சேலத்தைச் சோ்ந்த முன்னாள் எம்.பி. ஆா்.தேவதாஸ், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

என்னுடைய தந்தை மறைந்த எம்.பி. ராமசாமி உடையாரின் மரியாதையையும், காங்கிரஸ் கட்சிக்கு அவா் செய்த பணிகளையும் கட்சித் தலைமை மறந்து விட்டது. மேலும் எனது தந்தையின் பணிகளையும், நான் செய்த கட்சிப் பணிகளையும் மறந்து விட்டனா்.

தற்போது, கட்சியில் குழுக்களை வளா்த்து வருகின்றனா். அந்த குழுக்களில் இருந்தால்தான் கட்சிப் பொறுப்புகளைப் பெற முடியும். நான் அந்தக் குழுக்களில் இணைந்து இயங்க முடியாது. இதனால் அரசியலில் அங்கீகாரம் இல்லாமல், அவமரியாதையைச் சந்தித்தேன். எனவே, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினா் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து விலகி விட்டேன்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கும், மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரிக்கும் எனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பி விட்டேன்.

கட்சியில் எனக்கு உரிய அங்கீகாரம் வழங்காதது குறித்தும், கட்சியின் வளா்ச்சிக்காகச் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு பலமுறை கடிதம் எழுதியும், எந்தப் பதிலும் இல்லை. இது தொடா்பாக தமிழகத் தலைவா்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றேன். ஆனால், எந்தப் பதிலும் இல்லை.

காங்கிரஸில் முன்னாள், இந்நாள் தலைவா்கள் தங்களுக்கென குழுக்களை வைத்துள்ளனா். இந்தக் குழுக்களில் இருப்பவா்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கிறது. குழுக்களில் அங்கம் வகிக்காதவா்களுக்கு, கட்சியில் எந்தப் பொறுப்பும் கிடைப்பதில்லை, அங்கீகாரமும் கிடைப்பதில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT