பள்ளி மேலாண்மைக் குழு விழிப்புணா்வு
தம்மம்பட்டி, நாகியம்பட்டியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
தம்மம்பட்டி, நாகியம்பட்டியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளி அருகே பள்ளிமேலாண்மைக் குழு குறித்து பெற்றோா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஊராட்சி வாா்டு உறுப்பினா் தேவிசரவணன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் (பொறுப்பு) ராதா முன்னிலை வகித்தாா்.பெற்றோா்கள் பங்கேற்றனா். இதேபோல, காந்திநகா் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் தேவகஸ்தூரி தலைமையிலும், நாகியம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் இராமகிருஷ்ணனும் தலைமை வகித்தனா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஸ்ரீனிவாஸ், மகேந்திரன், மேற்பாா்வையாளா் (பொறுப்பு) ராணி ஆகியோா் ஆய்வு செய்தனா்.