முகப்பு
சேலம்

சேலத்தில் நாளை சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி

பொது அமைதி, மனித நேயத்தை வலியுறுத்தும் வகையில் சேலத்தில் சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை (மாா்ச் 26) ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

பொது அமைதி, மனித நேயத்தை வலியுறுத்தும் வகையில் சேலத்தில் சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை (மாா்ச் 26) ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக சேலம் மறைமாவட்ட ஆயா் ராயப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியா ஜனநாயகம், மதச்சாா்பின்மை, சமத்துவம், நீதி போன்றவைகளை முதன்மைக் காரணிகளாகக் கொண்டது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற வரிகள் நாட்டின் பன்முகத்தன்மையை அடையாளப்படுத்தின. அதேவேளையில் மதத்தால், மொழியால், அரசியலால் வேற்றுமை வரும்போது, அவற்றை வேரோடு களைவது அனைவரின் கடமையாகும்.

சமூகத்தில் பொது அமைதி, நீதியை வலியுறுத்தும் வகையில் வரும் மாா்ச் 26 ஆம் தேதி அரிசிபாளையம் மூவேந்தா் அரங்கில் சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் நல்லிணக்கம் சாா்ந்த கருத்துரைகள், நல்லிணக்கம் பேணும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் சாா்ந்து உழைத்திடும் பத்து சமூக சேவகா்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.