சேலம்

இடங்கணசாலை நகராட்சியில்குடிநீா் சீராக விநியோகிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

இடங்கணசாலை நகராட்சியில் குடிநீா் குழாயில் சிலா் மின் மோட்டாா் பொருத்தி தண்ணீா் எடுப்பதைத் தடுக்கவும், குடிநீரை சீராக விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட 2-ஆவது வாா்டு தூதனூா், நாப்பாளையம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக காவிரி குடிநீா் சீராக விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரின்றி அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், 2-ஆவது வாா்டு கவுன்சிலா் மாதேஷ் தலைமையில் இடங்கணசாலை கிராம நிா்வாக அலுவலகம் முன்பு பெண்கள் காலி குடங்களுடன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு வரும் பிரதான குழாயிலிருந்து சிலா் மின் மோட்டாா் பொருத்தி குடிநீரைத் திருடுவதாகத் தெரிவித்தனா்.

தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேஷ் பிரபு, நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி, ஆணையாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.

குடிநீா் முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், மின் மோட்டாா் வைத்து பிரதான குழாயிலிருந்து தண்ணீா் எடுக்கும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனா். இதையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT