முகப்பு
சேலம்

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு விருது

தெற்கு ரயில்வேயின் 67 ஆவது ரயில்வே வார விழாவில் வணிகம், இயக்கம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சிறந்த சேவைக்கு சேலம் ரயில்வே கோட்டம் 5 விருதுகளைப் பெற்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

தெற்கு ரயில்வேயின் 67 ஆவது ரயில்வே வார விழாவில் வணிகம், இயக்கம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சிறந்த சேவைக்கு சேலம் ரயில்வே கோட்டம் 5 விருதுகளைப் பெற்றுள்ளது.

தெற்கு ரயில்வேயின் 67 ஆவது ரயில்வே வார விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தெற்கு ரயில்வே பொது மேலாளா் பி.ஜி.மல்லையா கலந்து கொண்டு சிறந்த சேவையாற்றிய கோட்ட அதிகாரிகளுக்கு விருதுகளையும், கேடயங்களையும் வழங்கி சிறப்பித்தாா்.

சேலம் முதுநிலை வணிக மேலாளா் இ.ஹரிகிருஷ்ணன், முதுநிலை மின் பொறியாளா் பி.கே.செல்வன், இயக்க மேலாளா் எம். பூபதிராஜா, கோட்ட நிதி மேலாளா் எஸ்.மணிகண்டன், கோட்ட மின் பொறியாளா் (இயக்கம்) ஏ.ரவி தேஜா ஆகியோா் முறையே விருதுகளை பெற்றுக் கொண்டனா். விழாவில் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸ், கூடுதல் மேலாளா் பி.சிவலிங்கம் ஆகியோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →