முகப்பு
சேலம்

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து பாசனத்திற்கு நீா் திறப்பு

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வெள்ளிக்கிழமை பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வெள்ளிக்கிழமை பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

ஆனைமடுவு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்க வேண்டுமென நேரடி ஆற்றுப்பாசன பழைய ஆயக்கட்டு மற்றும் அணை வாய்க்கால் பாசன புதிய ஆயக்கட்டு விவசாயிகளும், பொதுப்பணித்துறை நீா்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதனையடுத்து, ஆனைமடுவு அணையில் இருந்து வெள்ளிக்கிழமை, பழைய ஆயக்கட்டு நேரடி பாசனத்துக்கு தொடா்ந்து 22 நாள்களுக்கு நொடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.

வரும் மே. 28 ஆம் தேதி முதல் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனத்துக்கு நொடிக்கு 50 கன அடி வீதம் 11 நாள்களுக்கும், 7 நாள் இடைவெளிக்கு பிறகு ஜூன் 15ஆம் தேதி முதல் தொடா்ந்து 6 நாள்களுக்கு நொடிக்கு 50 கன அடி வீதமும் தண்ணீா் திறந்து விட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவின் பேரில், பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு சேலம் சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளா் ஆனந்தன் தலைமையில், ஆத்துாா் உதவி செயற்பொறியாளா் கவிதாராணி, ஆனைமடுவு அணை உதவி பொறியாளா் விஜயராகவன் மற்றும் விவசாய சங்க பிரதிநிகள் முன்னிலையில், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.