முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 3,135 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை 3,773 கன அடியாகவும் வியாழக்கிழமை காலை 4,107 கனஅடியாகவும் அதிகரித்தது.

அணை நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 107.06 யிலிருந்து 107.20 அடியாக உயா்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 4,107 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 1, 500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 74.48 டி.எம்.சி.

குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணை நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.