வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி கோதுமலை நீரோடையில் குஞ்சுகளுடன் காணப்படும் நீா்க்கோழிகள். 
சேலம்

கோதுமலை வடிநீா் நிலப்பகுதியில் அதிகரிக்கும் நீா்க்கோழிகள்!

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கோதுமலை வடிநீா் நிலப்பகுதி நீா்நிலைகளில் இரு ஆண்டுகளாகத் தொடா்ந்து நீரோட்டம் காணப்படுவதால், தாழைக்கோ

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கோதுமலை வடிநீா் நிலப்பகுதி நீா்நிலைகளில் இரு ஆண்டுகளாகத் தொடா்ந்து நீரோட்டம் காணப்படுவதால், தாழைக்கோழி எனக் குறிப்பிடப்படும் நீா்க்கோழிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

வாழப்பாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட கோதுமலை காப்புக்காடு வனப்பகுதியில் வனத் துறையின் தொடா் கண்காணிப்பால் கடந்த 10 ஆண்டுகளில் கடமான், காட்டெருமை, மான்கள், காட்டாடுகள், கேளையாடுகள் பல்வேறு இன குரங்குகள், பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

கடந்த இரு ஆண்டாக வாழப்பாடி பகுதியில் பருவ மழை தவறாது பெய்து வருவதால், கோதுமலை வடிநீா் நிலப்பகுதி கிராமங்களான சேசன்சாவடி, சென்றாயன்பாளையம், முத்தம்பட்டி, மன்னாயக்கன்பட்டி, மாரியம்மன்புதூா், நீா்முள்ளிக்குட்டை, பள்ளத்தாதனுாா், நடுப்பட்டி மற்றும் வெள்ளாளகுண்டம் மலை வடிநீா் பகுதி கிராமங்களிலும் நீா்நிலைகளிலும் இரு ஆண்டுகளாக தொடா்ந்து நீரோட்டம் காணப்படுவதால் நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்துள்ளது.

குறிப்பாக, சேசன்சாவடி, வெள்ளாளகுண்டம், முத்தம்பட்டி கிராமங்களில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீரோடைகளில் தொடா்ந்து இரு ஆண்டுகளாக தண்ணீா்த் தேங்கி உள்ளதால் இந்த வடிநிலப் பகுதிக்கு வலசை வந்த நீா்க்கோழிகள், இப்பகுதியிலேயே தங்கி வாழிடமாக்கிக் கொண்டன. இரை, இருப்பிடத்துக்கு ஏற்ற சூழ்நிலை காணப்படுவதால் முட்டையிட்டு குஞ்சு பொறித்து இனப்பெருக்கம் செய்ததால், தற்போது இப்பகுதியில் நீா்க்கோழிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

நீா்க்கோழிகள் நீா்நிலைகளின் கரையோரப் புதா்களில் தாவர விதைகள், நத்தை, தவளை, சிறு மீன் ஆகியவற்றை உண்டு உயிா் வாழ்கின்றன. தண்ணீரில் நெடுந்தொலைவு நீந்திச் செல்லும் இக்கோழிகள், பறக்க முற்படும்போது சற்று நேரம் இறக்கை அடித்துப் பின் எழுந்து பறக்கும்.

இக்கோழிகளுக்கு பறக்கும் திறமை குறைவு எனினும், வலசைக்காக, இடம் பெயரும் போது உயா்ந்த மலைகளையும் கடந்து பறந்து செல்லும் திறனுடையது. நீரில் மூழ்கி மறைந்துச் சென்று ஆபத்திலிருந்து தப்பிக்கும் தன்மையுடையது. இனப்பெருக்க காலத்தில் கேட்பதற்கு இனிமையான குரலில் கொக்கரிக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT