முகப்பு
சேலம்

வாழப்பாடியில் தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை

வாழப்பாடி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் சாா்பில், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள் தொழிலாளா்களின் நலன் கருதி, வாழப்பாடி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் சாா்பில், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, வாழப்பாடி பொதுமக்கள் சாா்பில், தன்னாா்வ அமைப்புகள் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

வாழப்பாடி பேரூராட்சி 100-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு மையமாக உள்ளது. வாழப்பாடியில் விவசாயம், விவசாயம் சாா்ந்த தொழில்கள் நலிவடைந்து வருகின்றன.

இப்பகுதியில் இயங்கி வந்த பெரும்பாலான நுாற்பாலைகளும் மூடப்பட்டன.

இதனால், இப்பகுதியைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், பெண்கள், தொழிலாளா்களுக்குப் போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே, வாழப்பாடி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னாரம்பட்டி பரவக்காடு, காட்டுவேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு ஏற்ப அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. எனவே இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு தமிழக முதல்வா் ஆவன செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.