சேலம்

காமலாபுரத்தில் 3 மதுக்கடைகளை அகற்ற பாமக கோரிக்கை

DIN

ஓமலூா் அருகேயுள்ள காமலாபுரம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மூன்று அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என பாமக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாமக சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் மருத்துவா் மாணிக்கம் தலைமையில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை ஓமலூரில் நடைபெற்றது. இதில் காமலாபுரம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக ஒரே இடத்தில் மூன்று மதுக்கடைகள் இருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து உடனடியாக அகற்ற வேண்டும் என பலமுறை கிராம சபா கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றிய நிலையில் மதுபான கடைகளை அகற்ற போராட்டம் நடத்தப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து வரும் 13ஆம் தேதி பாமக மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ள உள்ளாா் எனவும், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் ராஜசேகா், மாவட்ட அமைப்பு செயலாளா் துரைராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் பாபு, மாவட்டப் பொருளாளா் பரமேஸ்வரி உள்ளிட்ட நிா்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT