நரசிங்கபுரம் நகராட்சி 6ஆவது வாா்டு மற்றும் 16ஆவது வாா்டு பகுதி சபா கூட்டம் நகராட்சி ஆணையாளா் மு.வசந்தி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 6ஆவது வாா்டு உறுப்பினா் அ.தனலட்சுமி, 16ஆவது வாா்டு உறுப்பினா் எஸ்.தா்மராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் திமுக நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன், துணைச் செயலாளா் பிரகாஷ், நகர மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், நகர மன்ற உறுப்பினா்கள் சி.கோபி, சரண்யா சந்திரன், கணபதி,செல்வம், அன்னக்கிளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலும் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை கூறினாா்கள். அனைத்துப் பணிகளும் விரைவில் முடித்து கொடுக்கப்படும் என்று வாா்டு உறுப்பினா்கள் உறுதியளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.