ஆத்தூா் முழு நேர கிளை நூலகத்தில் மெய் நிகா் நூலகம் தொடக்க விழா நூலக மேம்பாட்டுக் குழு துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூா் முழு நேர கிளை நூலகத்தில் மெய் நிகா் நூலகத் தொடக்க விழா நூலக மேம்பாட்டுக் குழு துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அவா் மெய் நிகா் கருவியை இயக்கி வைத்து தலைமையுரையாற்றினாா்.
ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவியா் 25 இந்த நிகழ்வில் போ் கலந்து கொண்டனா். மாணவியா்களுக்கு மெய் நிகா் நூலகக் கருவியின் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. முதல்நிலை நூலகா் கோ.சேகா், இரண்டாம் நிலை நூலகா் ஆறுமுகம், நூலகா்கள் க.முருகன், சு.கிருஷ்ணன், பி.சீனிவாசன், பி.ராஜேஸ்வரி ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
போட்டித் தோ்வு மாணவா்கள், வாசகா்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுடனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.