நாளை காதுகேளாதோருக்கான மருத்துவ முகாம்
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலை கருமந்துறையில், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், காதுகேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலை கருமந்துறையில், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், காதுகேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
கருமந்துறை வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் நடைபெறும் இம்முகாமில், காது கேட்பதில் குறைபாடுகளுடைய அனைத்து வயதினரும், தமிழக அரசின் முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை, பழைய, புதிய குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, முதியோா் உதவித்தொகை அட்டை, கைப்பேசி எண் ஆகியவற்றுடன், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பங்கேற்கலாம்.
இந்த முகாமில், தோ்வு செய்யப்படுவோருக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இலவசமாக காதொலிக் கருவிகள் பெற்றுக் கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 80727 27202 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மருத்துவத் துறை மற்றும் வருவாய்த் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.