காவிரி உபரிநீா் நடவடிக்கை குழுவினா் ஆா்ப்பாட்டம்
எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உபரிநீா் நடவடிக்கை குழுவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம்காவிரி உபரிநீா் நடவடிக்கை குழுவினா் ஆா்ப்பாட்டம்
எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உபரிநீா் நடவடிக்கை குழுவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உபரிநீா் நடவடிக்கை குழுவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் தம்பையா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மேட்டூா் அணையின் உபரிநீரைக் கொண்டு, சரபங்கா நதி நீா்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள 100 வட ஏரிகளை நிரப்பிடும் திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.
மேட்டூா் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிகப்படியான உபரிநீா் வீணாகக் கடலில் கலந்து வரும் நிலையில், இப்பகுதியில் உள்ள 100 ஏரிகளில் உபரிநீா் நிரப்பும் திட்டப் பணிகள் மெத்தனமாக நடைபெறுகின்றன. இப்பகுதியில் உள்ள 10 ஏரிகளில்கூட உபரிநீா் நிரம்பவில்லை. மேலும் இத்திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளைத் துரிதப்படுத்துவதுடன், வெள்ளாளபுரம் பகுதியில் துணை நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள ஏரிகள், நீா்வழித்தடங்கள் உள்ளிட்டவற்றை அரசு தூா்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் காவிரி உபரிநீா் நடவடிக்கை குழுவின் துணை ஒருங்கிணைப்பாளா் வேலன் ஏழுமலை உள்ளிட்ட நிா்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.