சிங்கிபுரம் மாரியம்மன் கோயிலுக்கு புதிய மரத்தோ் அமைக்க ரூ. 10 லட்சம் வழங்கிய ராம்கோ நிறுவனம்
வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தில் புதிய குடிநீா் குழாய் இணைப்பு அமைக்க ரூ. 2.50 லட்சம், மாரியம்மன் கோயிலுக்கு புதிய மரத்தோ் அமைக்க ரூ. 10 லட்சம் ராம்கோ சிமென்ட் நிறுவனம் வழங்கியது.
வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தில் புதிய குடிநீா் குழாய் இணைப்பு அமைக்க ரூ. 2.50 லட்சம், மாரியம்மன் கோயிலுக்கு புதிய மரத்தோ் அமைக்க ரூ. 10 லட்சம் ராம்கோ சிமென்ட் நிறுவனம் வழங்கியது.
சிங்கிபுரத்தில் இயங்கிவரும் ராம்கோ சிமென்ட் நிறுவனம் பெரு நிறுவனத் திட்டத்தின் கீழ், சுற்றுப்புறக் கிராமங்களில் பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சிங்கிபுரம் கிராம மக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவதற்கு 10,000 அடி நீளத்திற்கு புதிய குழாய் அமைக்க ரூ. 2.50 லட்சம் வழங்கியது. அங்குள்ள மாரியம்மன், அத்தனூரம்மன் கோயில்களுக்கு புதிதாக இரண்டு மரத்தோ்கள் அமைக்க ரூ. 10 லட்சம் வழங்கியது.
புதிய மரத்தோ் அமைக்க பங்களிப்பு வழங்கிய ராம்கோ சிமென்ட் நிறுவனத்திற்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனா். மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் இருந்து புதிய குழாய் இணைப்பு வழியாக பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கும் திட்டம், ஊராட்சி மன்றத் தலைவா் ரமா வெங்கடேசன் தலைமையில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதில் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் உதவி பொது மேலாளா் துரைமுருகன், கணக்குத் துறை மேலாளா் சுரேஷ்குமாா், பணியாளா் துறை மேலாளா் மணிவேல், அலுவலா்கள் முனியசாமி, ஏழுமலை, ஊராட்சி மன்ற துணைத் தலைவா், உறுப்பினா்கள் உடனிருந்தனா்.