மேட்டூர் காவிரியில் புனித நீராடிய பொதுமக்கள் 
சேலம்

மஹாளய அமாவாசை: மேட்டூர் காவிரியில் புனித நீராடிய பொதுமக்கள்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் புரட்டாசிமாத மஹாளய அமாவாசையை ஒட்டி மேட்டூர் காவிரியில் புனித நீராடிய பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

DIN

சேலம் மாவட்டம் மேட்டூரில் புரட்டாசிமாத மஹாளய அமாவாசையை ஒட்டி மேட்டூர் காவிரியில் புனித நீராடிய பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அம்மாவாசை என கூறப்படுகிறது. இந்நாளில் நதிக்கரை ஓரங்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த மூத்தோரின் ஆன்மா அமைதி பெற வேண்டி எள், தண்ணீர் வைத்து தர்ப்பணம் அளித்தல் பிண்டம் வைத்து பரிகார வழிபாடுகள் செய்வது வழக்கம்.

ஆண்டுதோறும் மஹாளய அமாவாசையில் மேட்டூர் காவிரியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு மூத்தோர் வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். 

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு மேட்டூர் காவிரி கரையில் காவேரி பாலம், மட்டம்,  அனல் மின் நிலைய பாலம் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடி புனித நீராடினார்கள்.

தங்களின் மூத்தோர்களுக்கு எள், தண்ணீர் வைத்து தர்ப்பணம் செய்தும் பிண்டம் வைத்து மூத்தோர்களின் ஆன்மா அமைதி பெற பரிகார வழிபாடு நடத்தினார்கள்.

மேச்சேரி பத்ரகாளியம்மன் ஆலயத்தில் பத்தாயிரத்திற்கு அதிகமானோர் கூடி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அமாவாசை வேண்டுதலுக்காக நெய் தீபம் ஏற்றியும் எலுமிச்சை தீபம் ஏற்றியும் தங்களது நேர்த்திக்கடனை செய்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஆளை நிர்வாகத்தின் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரம்... சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!

பிரியமான லெஹெங்கா... ஆம்னா ஷரீஃப்!

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

SCROLL FOR NEXT