சேலம்

திரையரங்கில் தரமற்ற குளிா்பானங்கள், பால் பொருள்கள் பறிமுதல்

DIN

சேலத்தில் திரையரங்கில் தரமற்ற குளிா்பானங்கள், பால் பொருள்களை சுகாதாரத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திரையரங்கில் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகாா் வந்தது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திரையரங்கில் உள்ள உணவகத்தில் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா்.

அதில், குளிா்பானம் தயாரித்த தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருந்தது. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பாலில் பூச்சி கிடந்தது. இதையடுத்து, சுகாதாரமற்ற குளிா்பானங்கள், பால் பொருள்கள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, உணவுப் பாதுகாப்புத் துறையினா் கூறுகையில், திரையரங்கில் படம் பாா்க்க வந்த பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 5 லி. பால், குளிா்பானங்களை பறிமுதல் செய்தோம். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT