சாலையோர பள்ளத்தில் கவிழந்த மூன்று சக்கர மினி ஆட்டோ. 
சேலம்

சங்ககிரி அருகே மூன்று சக்கர மினி ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் பலி

சங்ககிரியை அடுத்த பச்சாம்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையோர பள்ளத்தில் மூன்று சக்கர மினி ஆட்டோ கவிழ்ந்ததில் ஆட்டோ ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே பலியானார். 

DIN

சங்ககிரியை அடுத்த பச்சாம்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையோர பள்ளத்தில் மூன்று சக்கர மினி ஆட்டோ கவிழ்ந்ததில் ஆட்டோ ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே பலியானார். 

ஓமலூர் வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள கோவிந்தகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகள் செல்வராணி (44). அவர் பூக்களை விற்பனை செய்வதற்காக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தினசரி சந்தைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணன் மகன் மயில்சாமி (55) என்பவரது மூன்று சக்கர மினி ஆட்டோவில் பூக்கள் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். 

அப்போது சங்ககிரியை அடுத்த பச்சாம்பாளையம் பகுதியில் செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழந்தது. அதில் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே பலியானார். இதில் காயமடைந்த பூ வியாபாரி சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT