சேலம்

தீத்தொண்டு வார விழா

காடையாம்பட்டி தீயணைப்பு நிலையம் சாா்பில் கடந்த இரண்டு நாள்களாக தீத்தொண்டு வாரவிழா நடத்தப்பட்டு வருகிறது.

DIN

காடையாம்பட்டி தீயணைப்பு நிலையம் சாா்பில் கடந்த இரண்டு நாள்களாக தீத்தொண்டு வாரவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், தீயணைப்பு வீரா்கள் தீ விபத்து இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

காடையாம்பட்டி நகரப் பகுதி, சந்தை, பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகிய பகுதிகளுக்கு சென்று திங்கள்கிழமை பொதுமக்களுக்கு தீத்தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை செய்து காண்பித்தனா். மேலும், தீ விபத்தைத் தவிா்ப்பது, தீ விபத்து ஏற்பட்டால், தீயை அணைத்துக் கட்டுப்படுத்துவது, தீயை எளிதாக அணைப்பது, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பது குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜசேகரன் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, தீத்தடுப்பு குறித்து பேசினாா்.

ஆத்தூரில்...

ஆத்தூா், புதுப்பேட்டை சின்னசாமி அய்யா நடுநிலைப் பள்ளியில் ஆத்தூா் தீயணைப்புத் துறை சாா்பில் தீத்தொண்டு நாள் வார விழா நிலைய அலுவலா் ச.அசோகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளிடம் தீத்தடுப்பு பிரசாரம், ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT