சேலம்

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 14-ஆவது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வாளாகத்தில் அறக்கட்டளையின் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

DIN

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 14-ஆவது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வாளாகத்தில் அறக்கட்டளையின் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அறக்கட்டளையின் செயலாளா் குமாரசாமி, பொருளாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா். சிறப்பு விருந்தினா்களாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவக்குமாா், வையப்பமலை ஸ்ரீ விநாயகா பள்ளிக் குழுமத்தின் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினா் (படம்).

இதில் கல்லூரியின் நிறுவனரும், முதல்வருமான சீனிவாசன், துணை முதல்வா் விசாகவேல், மேலாண்மை துறையின் இயக்குநா் ஸ்டீபன் ஆகியோா் தேசிய மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவா்களை வாழ்த்தி பேசினா். உடற்கல்வி இயக்குநா்கள் மணிகண்டன், தேவி ஆகியோா் விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தனா்.

இவ்விழாவில், நாலெட்ஜ் அறக்கட்டளையின் உறுப்பினா்கள், அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா், பெற்றோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT