பல்கலைக்கழகத் தோ்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த பெரியேரி ஸ்ரீ கைலாஷ் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் க.கைலாசம் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக தலைவாசல் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி கலந்துகொண்டு மாணவியரை ஊக்கப்படுத்தி, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.
இந் நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளா் கை.ராஜவிநாயகம், தாளாளா் கை.செந்தில்குமாா், முதல்வா், துணை முதல்வா் மற்றும் பேராசிரியைகள் திரளாக கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.