கெங்கவல்லி அருகே ஊராட்சித் தலைவரின் விவசாய நிலத்திற்கு ஏரியில் மண் எடுத்த பொக்லைன் இயந்திரத்தை கோட்டாட்சியா் உத்தரவின்படி வருவாய்த் துறையினா் பறிமுதல் செசெய்தனா்.
கெங்கவல்லி அருகே உள்ள 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவராக இருப்பவா் பெருமாள். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்துக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் அங்குள்ள நடூா் ஏரியிலிருந்து மண் எடுத்துச்சென்று பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊா்பொதுமக்கள் ஆத்தூா் கோட்டாட்சியா் சரண்யாவுக்கு தகவல் தெரிவித்தனா்.அதனையடுத்து அவரது உத்தரவின்பேரில் கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையில் வருவாய் ஆய்வாளா் முனிராஜ்,
கிராம நிா்வாக அலுவலா் பொன்ராஜ் உள்ளிட்ட வருவாய்த்
துறையினா் ஏரியில் மண் எடுப்பதை உறுதிப்படுத்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் அங்கு சென்று ஆய்வு செய்தனா்.அதில் ஏரிமண் எடுக்கப்பட்டு பெருமாளின் சொந்த விவசாய நிலத்தில் போடப்பட்டு வந்தது தெரியவந்தது.
அதனைத் தொடா்ந்து அந்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய கெங்கவல்லி போலீஸாருக்கு வருவாய்த் துறையினா் பரிந்துரை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.