சேலம்

தேவண்ணகவுண்டனூர் அரசுப் பள்ளிக்கு இலவச வேன் வசதி தொடக்கம்!

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதன்முறையாக அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச வேன் வசதி தொடக்க விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின்  நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறையின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தேவண்ணகவுண்டனூர் ஊராட்சிக்குள்பட்ட கிடையூர் மேட்டூர், புதூர்மேற்கு, ஓடக்காடு, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் தினசரி பள்ளிக்கு வருகை தர வேன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளித் தலைமையாசிரியை கு.வசந்தாள் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சின்னாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினரும், திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவருமான பி.தங்கமுத்து  பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச வேன் சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்துப்பேசியது:-

பேருந்து வசதிகள் இல்லாத கிராமப்புறத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கும் கல்வி கற்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் தமிழகரசு இந்த வேன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இச் சேவையை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொண்டு இடையில் நின்றுவிடாமல் தொடர்ந்து பள்ளிக்கு வந்து கல்வி கற்று பயன் அடைய வேண்டும் என்றார்.

வட்டார வளமேற்பார்வையாளர் சிவக்குமார், ஆசிரியர் பயிற்றுநர் மூர்த்தி, பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் இரா.முருகன், ஆசிரியர்கள் சீனிவாசன், உமாமகஸ்வரி, பள்ளி மேலாண்மை குழுத்தலைவி சி.சத்யா, திமுக நிர்வாகிகள் பழனியப்பன், ரமேஷ், நடராஜன், சங்ககிரி நகர பொருளாளர் பி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT