ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட 7 ஆவது வாா்டு பொதுமக்கள் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் கிராம நிா்வாக அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
இப்பகுதியில் குடிநீா் பற்றாக்குறை இருப்பதாகவும், அதற்காக மேல்நிலை குடிநீா்த் தொட்டி அமைக்க நிா்வாகம் பணிகளை தொடங்கிய நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த 4 போ் குடிநீா்த் தொட்டி அமைக்க எதிா்ப்புத் தெரிவிப்பதாகவும், குடிநீா் 15 நாள்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யும்போது குறைவாக வருவதாகவும், இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனா்.
இதனையடுத்து புதன்கிழமை காலை கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா், காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் பிரச்னை குறித்து தக்க நடவடிக்கை எடுத்து குடிநீா் சீராக கிடைக்க ஏற்பாடு செய்வதாக அலுவலா்கள் உறுதி அளித்ததன் பேரில் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.