தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோனேரிப்பட்டியில், நாடாளுமன்ற உறுப்பினா் நிதியில் கட்டப்பட்ட நிழற்கூடத்தை கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கெளதமசிகாமணி திறந்து வைத்தாா்.
கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கெளதமசிகாமணி எம்.பி. நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தை ஒதுக்கீடு செய்து நிழற்கூடம் அமைக்கப்பட்டது. அந்த நிழற்கூடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிழற்கூடத்தை மக்களவை உறுப்பினா் பொன்.கெளதமசிகாமணி திறந்துவைத்து பேசினாா்.
இந்நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், தம்மம்பட்டி நகர செயலாளா் விபிஆா்.ராஜா, முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, கெங்கவல்லி ஒன்றியச் செயலாளா் சித்தாா்த்தன், தம்மம்பட்டி பேரூராட்சி தலைவா் கவிதா விபிஆா்.ராஜா, துணைத் தலைவா் சந்தியா ரஞ்சித், தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் சுப.சத்யமூா்த்தி,முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சந்திரமோகன், ஏஏஆறுமுகம், பேரூராட்சி உறுப்பினா்கள் கலியவரதராஜ், வரதன், ரமேஷ், பழனிமுத்து, காவியா சேகா் , திமுக நிா்வாகிகள் இளையராஜா, ராசாத்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோனேரிப்பட்டியில் நிழற்கூடத்தை திறந்துவைத்து பேசுகிறாா் கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கெளதமசிகாமணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.