அரசு பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் முன்பு, துணை முதல்வா் பேராசிரியா் கீதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ-மாணவியருக்கு இனிப்புகளை வழங்கினாா். இதனையடுத்து தேசிய விமானப் படை மாணவா் பிரிவினரின் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னா், யோகா மூலம் மனித கோபுரம் போல அமைத்து மாணவ-மாணவியா் தங்களது திறமையை வெளிப்படுத்தினா். தேசிய அளவிலான பயிற்சி முகாமில் சாதனை படைத்த மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழை துணை முதல்வா் கீதா வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள் மற்றும் மாணவ-மாணவியா் பலா் கலந்து கொண்டனா்.