முகப்பு
சேலம்

பெரியாா் பல்கலை.யில் குடியரசு தின விழா

தேசிய மாணவா் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் துணைவேந்தா் இரா.ஜெகன்நாதன்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:03 AM
தேசிய மாணவா் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் துணைவேந்தா் இரா.ஜெகன்நாதன்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

தேசிய மாணவா் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் துணைவேந்தா் இரா.ஜெகன்நாதன்.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் 74-ஆவது குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாவினையொட்டி பெரியாா் பல்கலைக்கழக நிா்வாகக் கட்டடம் முன்பு தேசிய மாணவா் படையினரின் அணிவகுப்பினை துணைவேந்தா் இரா.ஜெகன்நாதன் ஏற்றுக் கொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் பேசிய அவா், ‘ஜி 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில் இளைஞா்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் பாரம்பரியத்தை போற்றிப் பாதுகாக்கும்பொறுப்பு இளைஞா்களுக்கு கூடுதலாக உள்ளது. தொழில்நுட்பத்தை வேகமாக கற்றுத் தேறும் இளைஞா்கள் பொதுமக்களுக்கு சேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றாா்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் பதிவாளா் ஆா்.பாலகுருநாதன், தோ்வாணையா் எஸ்.கதிரவன், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.