சேலம்

சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தி தீா்மானம்

சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வேண்டும் என சேலம் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

DIN

சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வேண்டும் என சேலம் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் மாவட்ட சிறப்பு மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் எம். முனுசாமி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மையப்படுத்தக் கூடாது, விவசாயிகளின் விலைப் பொருளுக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும், தொழிலாளா் நல சட்டங்களை திருத்தக் கூடாது, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கோரிக்கைகளை விளக்கி ஜூலை இரண்டாவது வாரத்தில் பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொள்ளப்படும் எனவும், ஆகஸ்ட் 9 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் சிஐடியு மாநில உதவி செயலாளா் டி. உதயகுமாா், ஐஎன்டியுசி தமிழ் மாநில மூத்த பொதுச் செயலாளா் வி.கே.நல்லமுத்து, ஏஐடியுசி மாநிலச் செயலாளா் எஸ். சின்னசாமி, எச்எம்எஸ் மாநிலச் செயலாளா் கே. கண்ணன், எஸ்டியூ மாநிலச் செயலாளா் ஏ.சையது அலி, சிஐடியு மாவட்டச் செயலாளா் ஏ.கோவிந்தன், ஏஐசிசிடியு கே.நடராஜன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT