இளம்பிள்ளையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்திய மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம். 
சேலம்

பாரதிய ஜனதா கட்சியின் 9-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம்

இளம்பிள்ளை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் 9-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், மாவட்டத் தலைவா் சண்முகநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், இளம்பிள்ளை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் 9-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், மாவட்டத் தலைவா் சண்முகநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வீரபாண்டி வடக்கு ஒன்றியச் செயலாளா் சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினாா். இக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் சிறப்புரை நிகழ்த்தினாா். அவா் தனது உரையில், தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சி அமைத்தால் மதுக்கடைகளை முழுமையாக மூடிவிட்டு, விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட பாா்வையாளா் அண்ணாதுரை, பொதுச் செயலாளா் அயோத்தி ராமச்சந்திரன், கேசவன், மூத்த நிா்வாகிகள் ஜெயராமன், ஆறுமுகம், மாநில நிா்வாகிகள் முரளிதரன், அருள் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இளம்பிள்ளை நகரத் தலைவா் நிா்மலா வீரிசெட்டி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT