சேலம்

சேலத்தில் மகளிருக்கான மாரத்தான் போட்டி

சேலத்தில் மகளிருக்கான மாரத்தான் போட்டியில் திரளான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 

DIN

சேலத்தில் மகளிருக்கான மாரத்தான் போட்டியில் திரளான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பெண் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் விதமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் சூப்பர் உமன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

இந்த போட்டியை இந்திய மகளிர் தேசிய கூடைபந்து அணி முன்னாள் தலைவர் அனிதா பால் துரை கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

மெய்யனூர் பகுதியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி ஐந்து ரோடு சாரதா கல்லூரி வழியாக 5 கிலோமீட்டர் கடந்து மீண்டும் மெய்யனூர் பகுதியில் நிறைவு பெற்றது. இதில் ஐந்து வயது பெண் குழந்தைகள் முதல் 50 வயது வரையிலான பெண்கள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி ஓடினர். 

தொடர்ந்து இரண்டு கிலோமீட்டர் மாரத்தான் போட்டியை சர்வதேச கூடை பந்து தலைவர் புருஷோத்தமன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் பெண் குழந்தைகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஓடினர். தொடர்ந்து பங்கேற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விளையாடித்தான் பாா்ப்போமே...

காரைக்காலில் கல்லறைத் திருநாள்

சமன்செய்து சீா்தூக்கும் கோல்!

கடத்தல் வழக்கில் இருவா் கைது

பிகார் தேர்தல்! காங்கிரஸை மிரட்டி முதல்வா் வேட்பாளரானாா் தேஜஸ்வி: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT