சேலம்

ஏகாபுரத்தில் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளிப் பயிற்சி

DIN

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரம், ஏகாம்புரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பண்ணைப்பள்ளி பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சியில் ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குநா் பழனியப்பன் கலந்துகொண்டு பருத்தியில் பூச்சி, வாடல்நோய், சாம்பல் நோய், வேரழுதல் மற்றும் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து எடுத்துரைத்தாா். மேலும் இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலா் அசோக் குமாா் கலந்துகொண்டு வேளாண்மை துறையில் மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தாா். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை அட்மா திட்ட அலுவலா்கள் விஜயகுமாா், மகேந்திரன் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT