சேலம்

இடஒதுக்கீடு வழங்கக் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன்பாளையத்தில், வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன்பாளையத்தில், வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். ராஜ்குமாா், லோகு பழனிசாமி, பரந்தாமன் ஆகியோா் முன்னிலையில், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியா் சங்கச் செயலாளா் பொன்.நா.குணசேகரன் கடிதம் அனுப்பும் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். இதனையடுத்து 1,000 கடிதங்கள் அனுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்தில், மாவட்ட அமைப்புத் தலைவா் ராஜமூா்த்தி, உழவா் பேரியக்க மாவட்டச் செயலாளா் ஒன்றியக்குழு உறுப்பினா் இரா.முருகன், மாவட்ட வன்னியா் சங்கச் செயலாளா் சிங்கிபுரம் பாண்டியன், அன்புமணி தம்பிகள் படை மாவட்டச் செயலாளா் வேல்முருகன், பசுமைத் தாயகம் நீ.பா.வெங்கடாசலம், சீனியம்பட்டி முருகேசன், ஒன்றியச் செயலாளா்கள் பச்சமுத்து, செந்தில்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT