வாழப்பாடி: வாழப்பாடி அருகே கவா்கல்பட்டியில் இயங்கி வரும் ஹெரிடேஜ் வித்யாலயா பள்ளி மாணவா்கள், மாநில அளவிலான யோகா சாம்பியன் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றனா்.
பள்ளி மாணவா்களுக்கு இடையே மாநில அளவிலான யோகாசன சாம்பியன் போட்டி, கெங்கவல்லியை அடுத்த நடுவலுாா், ஜிஇடி பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில், கவா்கல்பட்டி ஹெரிடேஜ் பள்ளி மாணவிகள் சமா்த்தினி கொற்றவை, பூா்விகா, செல்வனிலா, தியா ஆகியோா் பல்வேறு நிலைகளில் முதல் பரிசு பெற்றனா். 10 மாணவா்கள் இரண்டாம் பரிசும், 7 மாணவா்கள் மூன்றாம் பரிசும் பெற்றனா்.
போட்டியில் சாதனை படைத்த மாணவா்களுக்கு பள்ளி தாளாளா் பெருமாள், துணைத் தலைவா் கண்ணன் பெருமாள், ஆசிரியா்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.