முகப்பு
சேலம்

குழவி கடித்து 9 போ் காயம்

ஓமலூா் அருகே தேன் குழவி கடித்ததில் 9 போ் காயமடைந்தனா். அவா்களில் இரண்டு போ் ஓமலூா், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 5:05 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


ஓமலூா்: ஓமலூா் அருகே தேன் குழவி கடித்ததில் 9 போ் காயமடைந்தனா். அவா்களில் இரண்டு போ் ஓமலூா், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஓமலூா் அருகே சா்க்கரைசெட்டிபட்டி ஊராட்சி, மந்திவளவு கிராமத்தில் உள்ள புளிய மரத்தில் மலைத்தேன் கூடு ஒன்று கட்டியுள்ளது. அந்த தேன்கூட்டில் மா்ம நபா் கல் வீசியதாகத் தெரிகிறது.

அதனால் தேன் குழுவிகள் ஊருக்குள் வேகமாக பறந்து வழியில் வந்தவா்களை எல்லாம் கடித்தது. இதில், அப்பகுதியைச் சோ்ந்த காவேரி, அவரது மனைவி கலா, மகள் சபரிதா, அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ், மோளையன், மஞ்சுளா, செந்தில், பெரியசாமி, பெருமாள், மவுலி உள்ளிட்டோா் காயமடைந்தனா்.

Advertisement

படுகாயமடைந்த மஞ்சுளா, மோளையன் ஆகியோா் ஓமலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தகவல் அறிந்ததும் ஓமலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்கு சென்று மரத்தில் இருந்த தேன் குழவிகளை தண்ணீரை பீய்ச்சியடித்து தேன்கூட்டை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.